பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் சொத்து மதிப்பு வெளியானது..!

Estimated read time 0 min read

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வானதி சீனிவாசன், கடந்த 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, தன்னிடம் ரூ.1.13 கோடி மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.5.03 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தன்னிடம் ரூ.2.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.3.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போது ரூ.22 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.83 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author