ஜப்பான் தனது புதிய இராணுவவாதத்தைக் கைவிட வேண்டும்: சீனா

டோக்கியோ விசாரணையின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் சமீபத்தில் ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச கலந்தாய்வு கூட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர். இக்கலந்தாய்வு கூட்டம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் கேள்விக்கு பதிலளிக்கையில், ஜப்பானின் வலதுசாரி சக்திகள் எதிர்காலம் இல்லாத புதிய இராணுவவாதத்தைக் கைவிட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், டோக்கியோ விசாரணை வரலாற்று நீதி குறித்து தீர்ப்பை வழங்கியது. தற்போது ஜப்பானிய புதிய இராணுவவாதம் தலைதூக்கும் நிலையில், டோக்கியோ விசாரணையின் பின்னணி, முடிவுகள், கோட்பாடுகள் ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்வது, நடைமுறை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author