ஆசியான் தலைவர் பதவி வகிக்கும் நாடான லாவோஸின் தலைமை அமைச்சர் சோனெக்சே சிபாண்டோனின் அழைப்பையேற்று, கிழக்காசிய ஒத்துழைப்புத் தலைவர்களின் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காகச் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 9ஆம் நாள் சிறப்பு விமானம் மூலம் வியண்டியனுக்குச் சென்று, லாவோஸில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
லிச்சியாங் கூறுகையில், பிராந்திய ஒத்துழைப்புகளில் ஆசியானின் மைய தகுதிக்கும், சர்வதேச விவகாரங்களில் ஆசியான் மேலதிக பங்காற்றுவதற்கும் சீனா உறுதியாக ஆதரவளிக்கும் என்றார்.
மேலும், பிராந்திய ஒத்துழைப்புகள் தொடர்புடைய முக்கிய நிகழச்சி நிரல்களில் பல்வேறு தரப்புகளுடன் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு இப்பிராந்தியத்தை உலக வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்தியாக்குவதைக் கூட்டாக முன்னேற்றவும் சீனா விரும்புகிறது என்றார்.