சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் முதலாவது தொலைபேசி உரையாடல் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்தத் உரையாடல், இரு நாட்டு வர்த்தக சர்ச்சையைத் தணித்து, சீன-அமெரிக்க உறவின் இயல்பான வளர்ச்சியை முன்னேற்றுவதற்குப் பங்காற்றியுள்ளது என்று 74.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையின் பிரதிநிதிகள் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சர்வதேச சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த 93.3 விழுக்காட்டினர் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு, இரு நாட்டு வர்த்தக சர்ச்சையைத் தீர்ப்பதற்கான ஒரே ஒரு சரியான தெரிவாகும் என்று கூறினர்.
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தைக்கு பிறகு, சீனா உடன்படிக்கையை சீராக செயல்படுத்தி வருகிறது. இது குறித்து, வர்த்தக சர்ச்சையைத் தீர்ப்பதற்கு இரு நாடுகள் உருவாக்கிய ஒத்தக் கருத்துகளை அமெரிக்கா பின்பற்றி, ஜெனீவா பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று 95.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.