சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தஜிகிஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்கு பிடிக்கும் பழமொழிகள் என்ற நிகழ்ச்சியின் தாஜிக் மொழிப் பதிப்பு ஜூலை 5ஆம் நாள் தஜிகிஸ்தானின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட துவங்கியது.
தஜிகிஸ்தானின் மக்கள் செய்தித்தாள் உள்ளிட்ட உள்ளூரின் பல முக்கிய செய்தி ஊடகங்கள் இந்நிகழ்ச்சி பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன. இது பல துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இது குறித்து தஜிகிஸ்தானின் பல்வேறு துறையினர் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிச்சின்பிங்கின் ஆட்சிமுறை சார்ந்த அறிவுத்திறமையைத் தஜிகிஸ்தான் மக்கள் அறிந்து கொண்டு, சீனப் பண்பாடு பற்றிய புரிதலை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங், தஜிகிஸ்தான்ப் பண்பாட்டு அமைச்சர் சடோரி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் தலைமைச் செயலாளர் அலிமோவ் முதலியோர் இந்நிகழ்ச்சியின் வெளியீட்டு விழாவில் உரை நிகழ்த்தினர்.
ஷென் ஹாய்சியுங் கூறுகையில், சீனாவுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையேயான நட்பார்ந்த பரிமாற்றம் நீண்டகால வரலாறுடையது. இந்நிகழ்ச்சியின் மூலம் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஆட்சி முறையின் பண்பாட்டு அடிப்படையை தஜிகிஸ்தானின் நண்பர்கள் புரிந்து கொண்டு, புதிய யுகத்தில் சீன வளர்ச்சிக்கான ஞான ஊற்றுமூலத்தை அறிந்து கொள்ள முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
தஜிகிஸ்தானில் ஒளிபரப்பப்பட துவங்கிய ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழிகள் என்ற நிகழ்ச்சி
