ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

Estimated read time 0 min read

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

ஈரான் – அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் 10 அம்ச திட்டத்தை வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கவும் போர் நிறுத்தம் மேற்கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் இன்று பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் பங்கேற்கிறார்.இதற்கிடையே, பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் , “பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இல்லையென்றால், அமெரிக்க கப்பல்கள் ஆயுதங்களை ரீலோடு செய்து கொண்டு ஈரானை தாக்க தயாராக இருக்கின்றன” என்று எச்சரித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author