ஏப்ரல் 2ம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

Estimated read time 0 min read

ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த முறை

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் ராமதாஸ், சசிகலா அணி என பலமுனைப் போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிற நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரில் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 21ம் தேதி கெளத்தூரில் பரப்புரையை நிறைவு செய்கிறார்.

More From Author