இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Current Weekly Status- CWS அடிப்படையில்) ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டில் (Q2 FY26) 5.2% ஆகக் குறைந்துள்ளது.
இது அதற்கு முந்தைய காலாண்டில் இருந்த 5.4% இலிருந்து சற்றே குறைந்துள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு கிராமப்புற வேலைவாய்ப்பே முக்கியக் காரணமாகும் என புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) காலமுறை தொழிலாளர் சக்தி ஆய்வு (PLFS) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகக் குறைவு: புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை
