தொந்தரவு செய்து வரும் தகாய்ச்சி ஆட்சிக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:கருத்து கணிப்பு

ஜப்பான் அரசின் தூதாண்மை பற்றிய 2026ஆம் ஆண்டு நீலநிற அறிக்கையில், சீனாவுடனான உறவின் வெளிப்பாடு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று என்பதிலிருந்து முக்கிய அண்டை நாடு என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியிலுள்ள சீனா-ஜப்பான் உறவு தகாஷி ஆட்சியால் மேலும் பாதிப்படைந்துள்ளது.

சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகளவில் இது குறித்து நடத்திய பொது மக்கள் கருத்து கணிப்பில், சீனாவுடனான உறவின் வெளிப்பாட்டைக் குறைத்த ஜப்பானின் செயல், சீனா-ஜப்பான் உறவின் நெருக்கடி நிலைமையை மேலும் தீவிரமாக்க கூடும் என்று 81.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சீனா-ஜப்பான் உறவு நெருக்கடி தொடர்ந்து நீடித்தால் ஆசிய-பசிபிக் பிரதேச நிலைமைக்கும் உலகளாவிய உத்திநோக்கு பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று 76.7 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் குமாமோடோ மாகாணத்தில் தாக்குதல் ஏவுகணைகளை நிலைநிறுத்தியதோடு அமெரிக்காவின் டோமாஹாக் எனும் சீர்வேக ஏவுகணைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் இராணுவ பயிற்சியில் ஜப்பானின் தரை தற்காப்பு படை முதன்முறையில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்றது. ஜப்பானின் இத்தகைய ஆபத்தான செயல்கள், சர்வதேச சமூகத்தின் கவனம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. கருத்து கணிப்பில் இது குறித்து 86.4 விழுக்காட்டினர் கூறுகையில் பிரத்யேக தற்காப்பு கொள்கையிலிருந்து ஜப்பான் முற்றிலும் விலகியுள்ளதாகத் தெரிவித்தனர். சீனா-ஜப்பான் இடையேயான 4 அரசியல் ஆவணகளையும் சர்வதேச சமூகத்துக்கான வாக்குறுதியையும் ஜப்பான் அரசு கடைப்பிடித்து நடைமுறை செயல்களின் மூலம் சீனா-ஜப்பான் உறவின் அரசியல் அடிப்படைகளைப் பேணிக்காக்க வேண்டும் என்று 89.1 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author