சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது.
சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 29, அன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில், அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை வழிமறித்து. 11 ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயற்சி செய்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைவாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.
கடற்கொள்ளையர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து, 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் ஊழியர்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
முன்னதாக, கடந்த கடந்த ஜனவரி 28 அன்று ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்த தகவல் இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்து, 17 மீனவர்களை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது
ஐ.என்.எஸ் சுமித்ரா, 36 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், விரைவான, இடைவிடாத முயற்சிகளின் மூலம், கொச்சிக்கு மேற்கே சுமார் 850 கடல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் 17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்கள், கடத்தப்பட்ட இரண்டு மீன்பிடிக் கப்பல்களை மீட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் விடைபெறும் போது, இந்திய கடற்படையை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும் பாகிஸ்தான் மீனவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் பாகிஸ்தான் மீனவர்கள் தனது மகிழ்ச்சை வெளிப்படுத்தனர். இந்திய கடற்படையிடம் “பை, பை என மகிழ்ச்சயாக தங்களது கைகளை உயர்த்தி கூறுவதைக் அந்த வீடியோவில் காண முடிகிறது.