சீனாவின் ச்சி குங் கட்சி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம் அனுப்பி, ச்சி குங் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தன் வாழ்த்து கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவில் மிக முன்னதாக நிறுவப்பட்ட ஜனநாயகக் கட்சியான ச்சி குங் கட்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மனம் ஒருமித்து, தேசிய சுதந்திரம், மக்களின் விடுதலை, நாட்டின் வலிமை ஆகியவற்றுக்கு ஞானத்தையும் ஆற்றலையும் வழங்கியுள்ளது. புதிய காலகட்டத்தில், ச்சி குங் கட்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊன்றி நின்று, புதிய யுகத்தின் சீனத் தனிச்சிறப்பியல்பு சோஷலிச சிந்தனையைக் கற்றுக் கொள்ள வேண்டும். கடல் கடந்த சீன இனத்தவர்கள், சீனாவுக்குத் திரும்பியவர்கள், வெளிநாடுகளில் கல்வி பயிலும் சீன மாணவர்கள் ஆகியோரை ஒன்றுபடுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டு இலட்சியத்துக்குச் சேவை புரிந்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம் வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை முன்னெடுப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.