தைவான் நீரிணை இருகரைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சினபிங்கின் அழைப்பின் பேரில் சீன கோமின்டாங் கட்சித் தலைவர் ஜெங் லிவென் ஏப்ரல் 7 முதல் 12ஆம் நாள் வரை சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டார்.

அவருடன் சந்திப்பு நடத்திய ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தி, இரு கட்சிகள் மற்றும் இருகரை உறவின் வளர்ச்சிக்கு தெளிவான திசையைக் காட்டினார். இருகரை உறவின் அமைதியான வளர்ச்சியை மேம்படுத்தி சக நாட்டவர்களின் நலன்களை அதிகரிக்கும் விதம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் பணியகம் அதிகாரத்துடன் சிறப்பு கொள்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இரு கட்சிகளிடையே வழக்கமான பரிமாற்ற இயங்குமுறையை ஆராய்ந்து உருவாக்குவது, இரு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே பரிமாற்ற தளத்தை உருவாக்குவது, ஃபூஜியன் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் ஜின்மென், மாஸு ஆகிய பகுதிகளுக்கு நீர், மின்சாரம் மற்றும் எரிவாயு வினியோகம் செய்யவும் அவற்றுக்கிடையே பாலம் அமைக்கவும் ஊக்குவித்து, ஜின்மென் மற்றும் மாஸு மக்களுக்கான நன்மைகளை அதிகரிப்பது, இருகரைகளிடையே பயணியர் விமானப் போக்குவரத்தின் பன்முக மீட்சியை ஊக்குவித்து இருகரை மனித தொடர்புக்கு மேலும் வசதியளிப்பது, குறிப்பிட்ட அரசியல் அடிப்படையில் தொடர்பு முறைமையை நிறுவி நோய் தடுப்பு வரையறைக்கு ஏற்ற தைவான் உற்பத்திப் பொருட்கள் சீனப் பெருநிலப்பகுதியில் நுழைவதற்கு வசதியளிப்பது, தைவானுடன் தொடர்புடைய மீன்பிடி தொழில் அணுகல் மேலாண்மையை மேம்படுத்தி உகந்த இடங்களில் தைவானின் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு சேவைபுரியும் துறைமுகங்களை அமைப்பது உள்ளிட்டவை இந்நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author