சீன-தென் கொரிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 5ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தென் கொரிய மக்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை ஷிச்சின்பிங் தெரிவித்தார். அண்டை நாடுகளுடான தூதாண்மை உறவில் சீன-தென் கொரிய உறவு எப்போதும் முக்கிய இடத்தில் உள்ளது என்றும், தென் கொரியாவுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு சுமுகமான பாதையில் வளர்ச்சியடைவதை முன்னேற்றி இரு நாட்டுகளுக்குப் பயனுள்ள நன்மைகளைப் படைப்பதாகச் சீனா விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.

பதற்றமான சர்வதேச நிலைமையை எதிர்கொண்டு இரு நாடுகள் பாதுகாப்புவாதத்தைக் கூட்டாக எதிர்த்து உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

புத்தாண்டில் முதலாவது அரசுத் தலைவரின் தூதாண்மை நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு, தென் கொரிய-சீன உறவின் வளர்ச்சிப் போக்கைப் பன்முகங்களிலும் மீட்சி பெறுவதை வலுப்படுத்த விரும்புவதாக லீ ஜே-ம்யுங் தெரிவித்தார். மேலும், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்துடன் கூடிய வளர்ச்சி வாய்ப்புகளை இறுகப்பற்றி இரு நாட்டின் பயனுள்ள ஒத்துழைப்புகளில் மேலதிக சாதனைகளைப் பெற முயற்சி மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author