சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் ஏற்பாட்டில், சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு மார்ச் 26 முதல் 30ஆம் நாள் வரை பிரசிலுக்கு பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணத்தின் மூலம், இரு தரப்பு தொழில் மற்றும் வணிகர்கள் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கிடையில் பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளின் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள், 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளன.
இந்தப் பிரதிநிதிகள் குழுவில், வேளாண்மை, உணவுப் பதனீட்டு கிடங்கு, நாணயம், அடிப்படை வசதி, எரியாற்றல், தொலைத்தொடர்பு, மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.