சீன-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்களின் 6ஆவது பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 20ஆம் நாள் காபூலில் நடைபெற்றது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, பாகிஸ்தான் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான இஷார் தார் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது வாங்யீ கூறுகையில், தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தரப்புடன் இணைந்து ஒன்றுக்கு ஒன்று ஆதரளிக்கச் சீனா விரும்புகிறது. இப்பிரதேசத்தின் விவகாரங்களில் எந்த வெளிப்புற சக்தியும் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறது. பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றத்தை முத்தரப்பு மேலும் நெருக்கமாக்கி நெடுநோக்கு ரீதியிலான பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றார்.
முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் கீழ் பெற்ற ஆக்கப்பூர்வமான சாதனைகளையும் முத்தரப்பின் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதில் சீனாவின் முயற்சிகளையும் முத்தாகி மற்றும் தார் வெகுவாகப் பாராட்டினர்.