தென் சீனா கடல் பகுதியில் குழப்பம் ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ்

சீன மக்கள் விடுதலைப்படையின் தெற்கு போர் மண்டலத்தின் செய்தித் தொடர்பாளரும், கடற்படையின் மூத்த ஆணையாளருமான ஸாய் ஷிச்சென் கூறுகையில், ஏப்ரல் 9 முதல் 12ஆம் நாள் வரை, தெற்கு போர் மண்டலத்தின் கடற்படைகள் தென் சீனக் கடல் பரப்பில் ஒழுங்கான ரோந்து பணி மேற்கொண்டன.

பிலிப்பைன்ஸ், இக்கடல் பரப்புக்கு வெளியே உள்ள நாடுகளை தன்பக்கம் இழுத்து, கூட்டு ரோந்து பணி மேற்கொண்டு, தென் சீனா கடல் பகுதியில் குழப்பம் ஏற்படுத்திய தோடு, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைத்துள்ளது என்றார்.

மேலும், இம்மண்டலத்தின் படைகள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் கடல் உரிமை நலன்களைப் பேணிக்காத்து, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதியுடன் பேணிக்காக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author