சமீபத்தில், டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான்-அமெரிக்கப் பாதுகாப்பு, தூதாண்மை மற்றும் கூட்டத்திற்கும் நீட்டிக்கப்பட்ட தடுப்புப் பாதுகாப்பு பற்றிய அமைச்சர்கள் கலந்தாய்வுக்குப் பிறகு, ஜப்பான் மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகள் தொடர்புடைய பிரதேசங்களிலுள்ள நாடுகளின் உயர் நிலை விழிப்பைக் கொண்டுள்ளன. இதனால் ஜப்பானின் முடிவுக்கு ஜப்பானிய மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பானின் இச்செயல்கள், பிரதேசத்தின் பதற்றத்தைத் தீவிரமாக்கி, போரை நோக்கி இட்டுச் செல்லும் தவறான நடவடிக்கைகளாகும்.
நீட்டிக்கப்பட்ட தடுப்பு என்பது பனிப்போரின் விளைவாகும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இராணுவ ஆற்றலின் மூலம், கூட்டணி நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதி இதுவாகும்.
நீட்டிக்கப்பட்ட தடுப்பு எனும் கண்ணோட்டத்தை மீண்டும் வலியுறுத்துவதால் அணு ஆயுதமில்லாத மூன்று வாக்குறுதிகளை ஜப்பான் மீறியுள்ளது. அமெரிக்காவிலிருந்து மேலதிகமான அணு ஆயுதப் பாதுகாப்புகளைப் பெற ஜப்பான் விரும்புவதை இது காட்டியுள்ளது.
2ஆவது உலகப் போரில் தோல்வியடைந்த நாடான ஜப்பான், வரலாற்று படிப்பினையைப் பெற வேண்டும். எந்த வடிவத்திலும் அணு ஆயுதங்களைத் தேடக் கூடாது. இராணுவ ஆற்றலை வலுப்படுத்தி, அணு ஆயுதங்களை விரிவாக்கும் பாதையைக் கைவிட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஜப்பானின் சொந்தத் தேசிய முன்னேற்றம் தேக்க நிலையில் நுழையும்.