சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் ஜெர்மனியும் முறையே உலகின் 2ஆவது மற்றும் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக விளங்குகின்றன. இரு நாட்டுறவு இரு நாடுகளின் நலனுக்கு தொடர்புடையது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் உலகத்துக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. பதற்றமாக மாறிய உலக நிலைமையில், சீனாவும் ஜெர்மனியும் நெடுநோக்கு ரீதியிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை வலுப்படுத்தி இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு புதிய வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
முதலாவது, ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கும் நம்பக கூட்டாளியாக இருக்க வேண்டும். இரண்டாவது, ஒன்றுக்கொன்று திறப்பு மற்றும் நன்மை தரும் புத்தாக்க கூட்டாளியாக இருக்க வேண்டும். மூன்றாவது, மானிட பண்பாட்டியல் ரீதியில் ஒன்றை ஒன்று புரிந்துணர்வு கொண்டுள்ள கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று சீன-ஜெர்மன் உறவின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து, ஷிச்சின்பிங் 3 முன்மொழிவுகளை முன்வைத்தார்.
