முதல் காலாண்டில் சின்ஜியாங்கின் புதிய எரியாற்றல் உற்பத்தி 28.3விழுக்காடு அதிகரிப்பு

Estimated read time 1 min read

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் மின் வலைப்பின்னலின் புதிய எரியாற்றல் மின்சார உற்பத்தியளவு 3810கோடி கிலோவாட் எட்டி கடந்த ஆண்டை விட, 28.3விழுக்காடு அதிகரித்துள்ளது. 1கோடியே 15லட்சத்து 20ஆயிரம் டன் அளவிலான நிலக்கரியைச் சிக்கனப்படுத்தியதற்கு இது சமமாகும்.

காற்று ஆற்றல், சூரிய ஆற்றல் நிறைந்த சின்ஜியாங் சீனா திட்டமிட்ட பெரிய ரக காற்று மற்றும் சூரிய ஆற்றல் மூல மின்சார உற்பத்தித் தளங்களின் மையப் பகுதியாகும். தற்போது, சின்ஜியாங்கில் ஹாமி, ச்சாங்ஜி, உருமுச்சி, காஷி, பாசோ, டூரூஃபேன் ஆகிய இடங்களில் கோடி கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட 6 புதிய எரியாற்றல் தளங்கள் கட்டியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Please follow and like us:

You May Also Like

More From Author