16ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

Estimated read time 1 min read

சீனாவின் பெய்ஜிங் மாநகரில் ஏப்ரல் 16 ஆம் நாள், 16ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. சீன ஊடக குழுமத்தின் துணைத் தலைவரும், 16ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யூ சுன்சாங் இதில் உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீனாவின் திரைப்பட வளர்ச்சியைப் பதிவு செய்பவராகவும் கலந்துகொண்டவராகவும் சீன ஊடகக் குழுமமானது, திரைப்பட துறையினர்களுடன் இணைந்து, புதிய வளர்ச்சி வழிமுறையைக் கூட்டாக ஆராய்ந்து, புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் படைக்க விரும்புகிறது என்றார்.

இத்திரைப்பட விழாவில், 139 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1826 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றுள் 88 விழுக்காட்டுத் திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்படங்களாகும்.  தியன்டான்  பரிசு நடுவர் குழுவில்  உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 புகழ் பெற்ற திரைப்பட துறையினர்கள் உள்ளனர்.

You May Also Like

More From Author