பட்டாசு ஆலை விபத்து: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நலம் விசாரிப்பு..!

Estimated read time 0 min read

சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் புகை வெளியேறியது. சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த ராஜ்குமார், செல்வம், ரமேஷ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. பட்டாசு ஆலைக்குள் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் தொழிலாளர் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்

காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author