“CM விஜய்க்கு PM ஆகும் யோகம்..”- விஜயின் ஜோதிடர் அதிரடி பேட்டி

Estimated read time 1 min read

தன்னை சுற்றி இருப்பவர்கள் தப்பு செய்த போது ஜெயலலிதா கண்டிக்காமல் விட்டுவிட்டார். அதுதான் அவர் செய்த தவறு என விஜயின் ஜோதிடரான ராதன் பண்டிட் கூறியுள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜயின் ஜோதிடரான ராதன் பண்டிட், “தான் அரசனாக முடியாது என்ற ஜோதிடரை கண்ணகி கோயில் கட்ட அழைத்துப் போனான் சேரன் செங்குட்டுவன். 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே ஜோதிடம் சபை ஏறியிருக்கிறது.

அப்போ சேரன் செங்குட்டுவன் முட்டாள் என்பீர்களா? ஜோதிடம் மூட நம்பிக்கை இல்ல சார். அது ஒரு கணிதம். ராதன் என்பது மராட்டிய சிவாஜியின் கேப்டன் பெயர். ரிக்கி என்ற பெயரை ஏன் சேர்த்துக்கொண்டேன் என்றால், நான் எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் சாராதவன். வன்னிஅரசுவை விட நான் பெரிய நாத்திகன். சிவபெருமானே பொண்டாட்டியை விட்டுவிட்டு போய் பிச்சை எடுத்திருக்கிறார்.

நான் பர்சனலா நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். என் சொந்த ஊர் ஊத்துக்குளியில கேட்டுப்பாருங்க. 3 மாசம் சுடுகாட்டில் தூங்கியிருக்கேன். கஷ்டப்பட்டாலும் நான் தவறு செய்ததில்லை. 25 ஆயிரம் பெண்களை ஜோதிடத்துக்காக சந்திந்திருப்பேன். சகோதரி என்பதை தாண்டி வேறு பார்வை பார்த்ததில்லை. என்னை பற்றி எந்த FIRம் போடப்படவில்லை. IT ரெய்டை தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் உண்மையில்லை.இப்படி பர்சனலா குற்றம் சாட்டுறதே குற்றம். ஒவ்வொருத்தர் வாழ்க்கையை திரும்பி பார்த்தீங்கன்னாலும் அதுல சோகமோ வலியோ அசிங்கமோ இருக்கும். அதையெல்லாம் கடந்து ஜெயிச்சிருக்கேனே.. அதை பாருங்க…

அஜித் சாருக்கும் CM யோகம் இருக்கு. ஆனால் CM விஜய்யின் ஜாதகம் படி அஜித் சார் போட்டிக்கு வரமாட்டார். விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு. 100 வருடம் கடந்து வாழ்வார். மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது. வரும் 2029ல் மோடிக்கு ராகுதசை ராகுபுத்தி. அவர் பிரதமர் ஆவது கடினம். மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும். விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார். முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. PM மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது CM விஜய்யின் ஜாதகம். இன்னும் 30 – 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார். CM விஜய்க்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. நான் சொல்வது பிடித்ததால் அவர் கேட்டார். நம்பி கேட்டிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. ஒரு ஜோதிடர் என்பதால் என்னை அவர் அங்கீகரிக்கவில்லை. தந்தை மகன் போல நண்பர்கள் போல ஏதோ ஒரு பிணைப்பு. அதனால் அவர் அன்புக்குரியவராக இருக்கிறேன். அவ்வளவுதான். ஸ்டாலின் தோற்பார், உதயநிதி வென்றாலும் எதிர்க்கட்சி என்று சொன்னேன். விஜய்க்கு நம்பிக்கையே இல்லை” என்றார்.

You May Also Like

More From Author