தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம்!

Estimated read time 1 min read

தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு 2024-2025ஆம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது என பாராட்டப்படுகிறது. இந்தியாவிலேயே முதல மாநிலமாகத் தமிழ்நாடு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் அவர்கள் 2021இல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிவரும் புதுமையான திட்டங்கள்தான் காரணம் :-

  • 700 கோடி பயண நடைகளுக்கு மேல் மகளிர் பயன்பெறும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் !
  • 4.95 இலட்சம் கல்லூரி மாணவியர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்!
  • அதே போல 3.28 இலட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் !
  • 1.15 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 அள்ளி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் !
  • 4 கோடி மக்களுக்கு மேல் தொற்றா நோய்களுக்கு மருத்துவம் வசதி, ஐ.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் !
  • ரூ.660 கோடியில் 95.97 இலட்சம் குழந்தைகள் பயன் பெறும் இல்லம் தேடி கல்வித் திட்டம்!
  • 2 இலட்சத்திற்கு மேலான ஏழை, எளியோர் வீடு கட்ட தலா ரூ.3.50 இலட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் !
  • ரூ.648.12 கோடியில் 10,96,289 உயிர்களைக் காத்துள்ள இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் !
  • 41 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து, 3,28,391 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்பெற உதவியுள்ள நான்முதல்வன் திட்டம்
  • 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த 10,14,368கோடி முதலீடுகள் ! இவற்றின் வாயிலாகப் பெருகும் 32,04,895 வேலைவாய்ப்புகள் !

தனிநபர் வருமானம் 4000 ஆயிரம் டொலராக அதிகரிக்கும் சாத்தியம் | Virakesari.lk

முதலிய திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் ! – புதிய உச்சம் ! எனும் வெற்றிக்கு அடித்தளங்கள் .இப்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குச் சூட்டியுள்ளது. 21.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710. இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309/- பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படவேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறந்த நிர்வாகத் திறன்களாலும், சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author