ஸ்பெயின் தலைமையமைச்சர் சான்செஸ் ஏப்ரல் 11 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் சீனாவில் பயணம் மேற்கொள்வது இது 4வது முறையாகும்.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சீன-ஸ்பெயின் ஒத்துழைப்புகளின் சிறப்பான அம்சமாகும். கடந்த பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத நாடுகளில், ஸ்பெயினின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக சீனா திகழ்கிறது. 2025ஆம் ஆண்டு, இரு தரப்புச் சரக்குகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 5500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 9.8 விழுக்காடு அதிகமாகும்.
தற்போது, உயர்தர முதலீட்டை ஈர்க்க ஸ்பெயின் முயன்று வருகின்றது. புத்தாக்கம், வேலை வாய்ப்புகள், நெடுநோக்கு தன்மையுடைய தொழில்கள் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகின்றது. பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டபோது, தலைமையமைச்சர் சான்செஸ், சீனாவின் 10 புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களைச் சந்தித்தார். ஸ்பெயினில் மேலதிக போட்டியாற்றல் கொண்ட தொழில் அமைப்பு முறையை உருவாக்கும் பொருட்டு, மேலதிக சீன முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அரசியல் துறையில், பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பதற்கு சீனாவும் ஸ்பெயினும் மேற்கொண்ட முயற்சிகள், சிக்கல்களும் மாற்றங்களும் பின்னிப்பிணைந்து வரும் உலகத்துக்கு நிதானமான ஆற்றலை வழங்கும்.
தலைமையமைச்சர் சான்செஸின் இந்தப் பயணம், ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஸ்பெயினின் இணைப்புப் பங்கினை வலுப்படுத்தி, சீன-ஐரோப்பிய உறவுக்கு மேலதிக நிலைத்தன்மையை ஊட்டும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
