139வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி துவக்கம்

Estimated read time 0 min read

139வது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் முற்பகல் துவங்கியது. நடப்புப் பொருட்காட்சி ஏப்ரல் 15 முதல் மே 5ஆம் நாள் வரை மூன்று கட்டங்களாக நடத்தப்படும். 15 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இப்பொருட்காட்சி இடத்தில், 75 ஆயிரத்து 700 காட்சி இடங்குகள் அமைக்கப்பட்டன. 32 ஆயிரத்துக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.

மேலும், அணியக்கூடிய நுண்ணறிவார்ந்த பொருட்கள், காட்சி தொழில் நுட்பங்கள், நுகர்வோர் ட்ரோன்கள், ஒருங்கிணை வீடு மற்றும் தோட்டங்களின் சாதனங்கள் உள்ளிட்ட 9 சிறப்பு காட்சியரங்குகள் நடப்புப் பொருட்காட்சியில் புதிதாக அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author