சீனத் தேசிய விண்வெளி பயணப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, குறிப்பிட்ட விண்வெளிக் கோளப்பாதையில், “கியூ ச்சியாவ்-2” தொலைத்தொடர்பு செயற்கை கோளின் மீதான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்தச் செயற்கை கோள் சீராக இயங்கி, தனக்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. இது, சந்திர ஆய்வு திட்டத்தின் 4ஆவது காலக்கட்ட பணி உள்ளிட்ட பணிகள் சார்ந்து சேவை புரியலாம்.
மார்ச் 20ஆம் நாள் அன்று செலுத்தப்பட்ட இந்தச் செயற்கை கோள் ஏப்ரல் 2ஆம் நாள், சந்திரனின் சுற்றுவட்டபாதையில் நுழைந்தது.
பின்னர் ஏப்ரல் 6ஆம் நாள், சந்திரனின் பின்புறத்தில் ஆய்வு பணி மேற்கொண்டுள்ள “சாங் ஏர்-4” விண்கலத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்றது.