இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சி

இவ்வாண்டின் முற்பாதியில் சீனப் பொருளாதாரத் தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, சிங்கப்பூரின் OSIM என்னும் தொழில் நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் வாங் மிங்ட்சி கூறுகையில்,

சீனப் பொருளாதார அதிகரிப்பின் மீது நம்பிக்கை ஆர்வம் கொள்கிறோம். மேலதிக கொள்கைகள் நடைமுறைக்கு வருவதுடன், OSIM தொழில் நிறுவனமும் மேலும் வளர்ச்சியடையம் என நம்புவதாக தெரிவித்தார்.

பூர்வாங்க கணக்கீட்டின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 61 லட்சத்து 68 ஆயிரத்து 360 கோடி யுவானை எட்டியது.

பொதுவாக பார்க்கும் போது, உற்பத்தி அளவு நிதானமாக அதிகரித்து வருகிறது. உள் நாட்டுத் தேவை மீட்சியடைந்து வருகிறது. புதிய இயக்காற்றல் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது.

சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம், உலகத்தின் முன்னணியில் இருந்து, உலகப் பொருளாதார அதிகரிப்பின் முக்கிய இயக்காற்றலாக திகழ்கிறது.

இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.7 விழுக்காடு அதிகமாகும்.

நுகர்வுப் பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.8 விழுக்காடு அதிகமாகும்.

சீனாவின் பெரியளவிலான சந்தையின் மேம்பாட்டை இது காட்டுகிறது. மேலும், சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தவிரவும், சீனாவின் நிதானமான கொள்கைகள், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

முழு ஆண்டின் வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கான நம்பிக்கை சீனா கொள்கிறது!

Please follow and like us:

You May Also Like

More From Author