ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலகின் ஃபாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாட்டில் பங்கேற்க, சீனாவுக்கு வருகை தந்த இந்தோனேசிய அரசுத்தலைவர் பிரபோவோ சுபியாந்தோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 3ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், அரசுத்தலைவர் பிரபோவோ சுபியாந்தோ இன்னல்களைச் சமாளித்து நினைவு மாநாட்டுக்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளது, இரு நாட்டு உறவுக்கான முக்கியத்துவத்தையும் சீன மக்கள் மீதான இந்தோனேசிய மக்களின் மனமார்ந்த நட்புறவையும் வெளிகாட்டியுள்ளது. இந்தோனேசியா வெகுவிரைவில் இயல்பான ஒழுங்கு நிலைக்குத் திரும்புவதையும், இந்தோனேசியா வளர்ச்சி அடைவதையும் சீனா ஆதரிக்கின்றது என்று தெரிவித்தார்.
பிரபோவோ சுபியாந்தோ கூறுகையில், உள்நாட்டு நிலைமை நிலையாகி வருகின்றது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாட்டில் சீன மக்களுடன் பங்கெடுத்ததால் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்தார்.