திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

Estimated read time 0 min read

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவுக்கு எதிராக பேசி வருவதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என ஏற்கெனவே புகார் எழுந்தது.

இந்நிலையில், சேலம் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் அதிகரித்துள்ளது எனவும் இதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் இந்த ஆட்சியில் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

இதே போன்று மதுரை பிரசாரத்தில், முருகன் அருளால் நிச்சயம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன்காரணமாக பிரேமலதா மீது முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author