ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை தோண்ட அளித்த அனுமதியை ஏன் ரத்துக் செய்யக் கூடாது என்று விளக்கம் அளிக்க கோரி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை அடிப்படையில், ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது. இந்த கிணறுகளை தோண்ட அனுமதி கோரி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2023 அக்டோபரில் விண்ணப்பித்திருந்து. மனுவை ஆய்வு செய்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை தோண்ட அளித்த அனுமதியை ஏன் ரத்துக் செய்யக் கூடாது என்று விளக்கம் அளிக்க கோரி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.