2ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 26 முதல் 30ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. முதலாவது பொருட்காட்சியுடன் ஒப்பிடும்போது, இப்பொருட்காட்சியின் சர்வதேசமயமாக்க நிலை மேலும் உயர்வாக உள்ளது.
இப்பொருட்காட்சியில் ஒவ்வொரு சங்கிலியின் புதிய தயாரிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய செயல்முறைகள், புதிய பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.
தற்போது, 69 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய 700 நிறுவனங்கள் இப்பொருட்காட்சியகத்தில் நுழைந்து தயாராகியுள்ளன. 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் பதிவு செய்து இப்பொருட்காட்சியைப் பார்க்கவுள்ளனர்.
ஏறக்குறைய 80 வெளிநாட்டு உயர்நிலை கொள்முதலாளர் குழுக்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன. இந்த எண்ணிக்கை முதலாவது பொருட்காட்சியை விட அதிகமாக உள்ளது.