மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

Estimated read time 0 min read

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து 30,000 பேர் நடத்திய பிரம்மாண்ட பேரணியின் வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், மக்களின் இந்த எழுச்சி காங்கிரஸ் கட்சிக்கு விடப்பட்ட கடுமையான எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் அதிகாரமடைவதை மக்கள் விரும்புவதையே இந்த ஆதரவு காட்டுகிறது என்றும், எதிர்க்கட்சிகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author