நடைமுறைத்தன்மையே தொழில்நுட்ப புத்தாக்கத்தின் தரத்தை மதிப்பிடும் அளவுகோல்

சீனாவின் டாலியன் நகரில் தற்போது நடைபெற்று வரும் கோடைக்கால டாவோஸ் மன்றக் கூட்டம் குறித்து சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகெங்கிலும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், சீனாவின் பெரிய சந்தை, வளமான பயன்பாட்டு சூழல்கள் ஆகியவை, புத்தாக்க தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாட்டிற்கான மாற்றத்துக்கு பரந்த சோதனை தளத்தை வழங்குகின்றன என்று 93.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

ஏஐ துறையில் பெரியளவிலான புத்தாக்கம் குறித்து, இத்தகைய புத்தாக்கமானது, ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல வணிக சுழற்சியின் கட்டுமானத்தை ஊக்குவித்து, தொழில்நுட்ப புத்தாக்க சாதனைகள் விரிவாக்கக்கூடிய நீண்டகால வளர்ச்சி பாதையில் பயணிக்க உதவும் என்று 85.1 விழுக்காடினர் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டு 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் தொடக்க ஆண்டாகும். சீனா தனது உயர்தர வளர்ச்சிக்கான இலக்குகளை விரிவாக உருவாக்கி, புத்தாக்கத்தின் நடைமுறை பயன்பாட்டிலும் மேலதிக மக்களுக்குப் பயனளிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து, உயர்மட்ட திறப்புக் கொள்கையை கடைப்பிடித்து உலகளாவிய புத்தாக்க வலையமைப்பில் இணைந்து வரும் சீனா, உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கு மதிப்புமிக்க உறுதித்தன்மையை அளித்துள்ளது என்று 92.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author