வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் அலை காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் சீர்குலைவை சந்தித்துள்ளன.
கடும் பனிமூட்டம் காரணமாகப் பார்வைத்திறன் மிக குறைந்ததால், இன்று ஒரே நாளில் மட்டும் டெல்லி விமான நிலையத்தில் சுமார் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் 64 புறப்பாடுகளும், 64 வருகைகளும் அடங்கும்.
போதிய பார்வைத்திறன் இல்லாத காரணத்தால் 8 விமானங்கள் அருகிலுள்ள மற்ற விமான நிலையங்களுக்குத் திசைதிருப்பப்பட்டன.
மேலும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை இயக்க CAT III எனும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் ‘ரெட் அலர்ட்’: கடும் பனிமூட்டத்தால் 128 விமானங்கள் ரத்து
