பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

Estimated read time 0 min read

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்,

மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது. நேற்றைய வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற 2 மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது மகளிர் மசோதா தோல்வி அடைந்தததில் எதிர்கட்சிகளின் சதி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author