தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை “பயங்கரவாதி” என்று விமர்சித்துள்ளது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியைக் கடுமையாகச் சாடிய கார்கேவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,”அதிமுக எப்படி மோடியுடன் இணைய முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. அவரது கட்சியும் சமத்துவம் மற்றும் நீதியில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அத்தகையோருடன் இணைவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழக தேர்தல்: பிரதமர் மோடியை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே
