ஷிச்சின்பிங்குடன் லாவோஸ் அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் சந்திப்பு

ஏப்ரல் 21ஆம் நாள் மாலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான தோங்லூனின் சிறப்புத் தூதராகச் சீனாவுக்கு வருகைத் தந்துள்ள லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், நிரந்தர துணை தலைமை அமைச்சருமான சலூம்சாயைச் சந்தித்துரையாடினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-லாவோஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவும் சீன-லாவோஸ் நட்பு ஆண்டுமாகும். புதிய வரலாற்றுத் துவக்க புள்ளியிலிருந்து, இரு தரப்பும் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி நெடுநோக்கு இணைப்பை ஆழமாக்கி பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும். மேலும், கூட்டு அறைகூவல்களைக் கைகோர்த்து கொண்டு கூட்டாக சமாளித்து சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூகம் உயர் வரையறை, உயர் தரம் மற்றும் உயர் நிலை என்ற இலக்கை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்வதைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.  

Please follow and like us:

You May Also Like

More From Author