மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: 8-வது ஊதியக்கமிஷன் முக்கிய அறிவிப்பு  

Estimated read time 1 min read

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக்கமிஷன் தொடர்பான புதிய விளக்கத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20 அன்று வெளியான பத்திரிகை குறிப்பின்படி, அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழப்பங்களுக்கு அரசு தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளது.
ஆரம்பக்கட்ட ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க விரும்பிய தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மட்டுமே ஏப்ரல் 20-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மற்ற அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க ஏப்ரல் இறுதி வரை அவகாசம் உள்ளது.
இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author