வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு  

Estimated read time 0 min read

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று காலை நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பால் தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்காது. எனினும் ஒரு சில இடங்களில் மிதமழைக்கு வாய்ப்பு உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author