திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை!

Estimated read time 0 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாகத் தடை நீடிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்து வருகிறது. கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதையடுத்து மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கப் பேரூராட்சி நிர்வாகம் நேற்று தடைவிதித்து. இன்றும் மழை நீடிப்பதால், மெயின் அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author