உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவின் கொடியேற்றம் வரும் நவம்பர் 24 அன்று நடைபெறும், தொடர்ந்து நவம்பர் 30 தேரோட்டம் நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகாதீபம் டிசம்பர் 3 நடக்கிறது. பின்னர் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை தெப்பல் திருவிழா நடக்கும்.
இதற்கிடையே டிசம்பர் 4 மாலை 7.58 முதல் டிசம்பர் 5 காலை 5.37 வரை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:
