சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் மாலை பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மொசாம்பிக் அரசுத் தலைவர் சாபோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீனாவுக்கும் மொசாம்பிகுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவு வரலாற்றைக் கடந்து மலையையும் கடலையும் தாண்டி நிற்கின்றது. 600 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் மிங் வம்சத்தின் கடல்வழி வல்லுநர் ச்சேன்ஹெ, கப்பல் அணிக்குத் தலைமை தாங்கி, மொசாம்பிக் கடற்கரையைக் சென்றடைந்தார். கடந்த நூற்றாண்டின் 60 மற்றும் 70 ஆண்டுகாலத்தில், மிக கடினமான நிலைமையில் சிக்கிகொண்ட சீனா, தேசிய சுதந்திரத்திற்கும் இன விடுதலைக்கும் பாடுபட்ட மொசாம்பிகுக்கு உறுதியாக ஆதரவு அளித்தது. இரு நாட்டு நட்புறவுக்கு வலிமைமிக்க அடிப்படையை இது ஏற்படுத்தியது என்றார்.
