7ஆம் நாள் ஜகார்த்தாவில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டில் சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதிய நிலைமையையும் புதிய அறைகூவல்களையும் எதிர்நோக்கும் போது, கிழக்காசிய உச்சி மாநாடு, சொந்த நிலைப்பாட்டில் ஊன்றி நின்று, பிரதேசத்தில் நீண்டகால நிதானத்தையும் தொடர்ச்சியான செழுமையையும் நனவாக்குவதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றார்.
தென் சீன கடல் நடைமுறை விதிக்கான கலந்தாய்வை சீனாவும் ஆசியான் நாடுகளும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றன. இப்பிரதேசத்துக்கு வெளிப்புற நாடுகள் பங்காற்ற வேண்டும். கடல் மாசுப்பாடு நீண்டகாலமாக பாதிப்பு ஏற்படுத்தும். வரலாறு மற்றும் மனிதர்களுக்கு பொறுப்பு ஏற்கும் மனப்பாங்குடன் கடல் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.