சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நுகர்வு, வெளிநாட்டு வர்த்தகம், அன்னிய முதலீடு முதலிய துறைகள் திட்டத்தின்படி சீராக வளர்ந்து வருகின்றன.
இது பற்றி சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வேன்தாவ் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நுகர்வுத் துறை முக்கிய உந்து சக்தியாகவும் நிதானமாகவும் பங்காற்றி வருகின்றது என்றும், சீனாவின் நுகர்வுச் சந்தை அளவானது உலகளவில் 2ஆம் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், சீனாவின் சரக்கு வர்த்தக அளவு உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது. பெரிய வர்த்தக நாடு என்ற தகுநிலையைச் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் சேவை வர்த்தக அளவு ஒரு இலட்சம் கோடி டாலரை எட்டி, உலகளவில் 2ஆம் இடத்தில் உள்ளது.