சீன-பின்லாந்து புத்தாக்கத் தொழில் துறை ஒத்துழைப்பு கமிட்டியின் 6வது கூட்டம் ஜனவரி 26ம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள், பல வணிக ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. எண்ணியல்மயமாக்க வளர்ச்சி முறை மாற்றம், கரி குறைந்த பசுமை துறை, மருத்துவ மற்றும் ஆரோக்கியம் முதலிய அம்சங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
பின்லாந்தின் கோன் மின்தூக்கி குழுமத்தின் இயக்குநர் குழு துணை தலைவர் யூசி ஹெர்லின் இக்கூட்டத்தில் கூறுகையில், எங்கள் மிக முக்கிய சந்தைகளில் ஒன்றான சீனச் சந்தை, எங்களது மொத்த வருமானத்தில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. தொடர்ந்து சீனச் சந்தையில் முதலீடு செய்ய உள்ளோம்.
சீனச் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக, சேவை துறையின் எண்ணியல்மயமாக்க மாற்றம், வீடுகளின் நவீனமயமாக்க மேம்பாடு முதலியவை, கவனத்திற்குரியவை. வரும் 10 ஆண்டுகளில் எங்கள் வளர்ச்சிக்கு மிக பெரிய உந்து சக்தியாக இவை மாறும் என்று தெரிவித்தார்.
