இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஏப்ரல் 27ல் கையெழுத்து என தகவல்  

Estimated read time 0 min read

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியில் கையெழுத்தாக உள்ளது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இது இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

You May Also Like

More From Author