ஈராக்கின் புதிய அரசுத் தலைவர் அமிதிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் ஈராக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நிஜார் அமிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவுக்கும் ஈராக்கும் இடையே ஆழமான நட்புறவு உண்டு. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளிடையில் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. மற்ற தரப்பின் மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் இரு தரப்பும்  எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன. எரியாற்றல்,  பொருளாதாரம் மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புகளில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சீன-ஈராக் உறவுக்கு நான் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் அமிதியுடன் இணைந்து இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவைப் புதிய நிலைக்குக் கொண்டு வருவதை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க நான் விரும்புகிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். 

Please follow and like us:

You May Also Like

More From Author