அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், H-1B விசா திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், அதன் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அதை மீண்டும் தொடங்கவும் புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘எண்ட் H-1B விசா அப்யூஸ் ஆக்ட் ஆஃப் 2026’ (End H-1B Visa Abuse Act of 2026) என்று அழைக்கப்படும் இந்த மசோதாவை, அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்பி எலி கிரேன் (Eli Crane) அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைக் காக்கவும், வெளிநாட்டு மலிவான உழைப்பைச் சார்ந்திருப்பதை நிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? புதிய மசோதாவின் தாக்கங்கள்
