பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷேரிஃப்அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
இரு நாட்டு நட்புறவு குறித்து அவர் கூறுகையில்,
பாகிஸ்தான்-சீன நட்புறவு வெறும் சொற்கள் மட்டுமல்லாமல், வரலாற்றின்
நடைமுறையிலிருந்து வளர்ந்து வந்துள்ளது. அமைதி காலத்திலும் போர் காலத்திலும்,
சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்துக் கொண்டு நிற்கின்றன. சீனாவின் ஆதரவு, எந்த வித
அரசியல் நிபந்தனைகள் இல்லாமல் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சீன அரசுத்
தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில், இரு நாட்டு நட்புறவு தொடர்ந்து முன்னேறி
வருகிறது. தைவான், ஹாங்காங், ஷி சாங், ஷின் ஜியாங், தென் சீனக் கடல் தொடர்பான
பிரச்சினைகளில் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவு அளிப்பது உறுதி என்று தெரிவித்தார்.
ஷிச்சின்பிங், தொலைநோக்கு தன்மை வாய்ந்த தலைவர்
என்று பாராட்டியதற்குக் காரணம் குறித்து, அவர் கூறுகையில், மக்களின் நலனைக் கருதி
வரும் தலைவராக ஷிச்சின்பிங் ஆவார். உண்மையான பலதரப்புவாதத்தை அவர்
நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
முன்மொழிவு, சீனா, அண்டை நாடுகள் மற்றும் உலகிற்கு கூட வேலை வாய்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.