அமெரிக்காவோடு நேரடி பேச்சுவார்த்தை இல்லை என ஈரான் திட்டவட்டம்  

Estimated read time 0 min read

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ஈரான் தரப்பில் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமாபாத் சென்றடைந்தனர்.
இவர்களுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் தூதர்களாக ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பியிருப்பது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author